ஆப்கான்: பெண்கள் விளையாட்டுகளில் ஈடுபட தடை விதித்த தலிபான் அரசு !

ஆப்கானிஸ்தானில் தற்பொழுது பெண்கள் கிரிக்கெட் போன்ற எந்த ஒரு விளையாட்டுகளும் பங்கேற்க தடை விதிப்பதாக தற்பொழுது தலிபான்கள் அறிவித்துள்ளார்கள்.

Update: 2021-09-09 13:36 GMT

ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுகள் கொண்டுவந்துள்ள தலிபான்கள், இடைக்கால அரசை அறிவித்தனர். ஏற்கனவே இவர்களுடைய ஆட்சியின் போது பெண்களுக்கு பல்வேறு வகையான உரிமைகள் மறுக்கப்பட்டன குறிப்பாக கல்வி சமத்துவம் போன்ற பல தரப்பு உரிமைகளும் மறுக்கப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது புதிதாக தற்காலிக பிரதமராக முல்லா முகமது ஹஸன் அகுந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்காலிக துணை பிரதமர்களாக முல்லா அப்துல் கனி பராதர் மற்றும் மவுல்வி அப்துல் சலாம் ஹனாபி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசை உருவாக்கிய நிலையில் பல்வேறு அதிரடியான முடிவுகளையும் அவர்கள் தொடர்ச்சியான எடுத்துக்கொண்டு வருகிறார்கள். 


அந்த வகையில் தற்பொழுது, தலிபான்கள் பயங்கரவாத அமைப்பின் கலாச்சார பிரிவின் துணைத் தலைவர் அஹமதுல்லா வாசிக் ஒரு நிகழ்ச்சியின்போது கூறுகையில், பெண்கள் விளையாட்டில் பங்கேற்பது அவசியமில்லை என்று நாங்கள் கருதுகிறோம். குறிப்பாக கிரிக்கெட் விளையாடுவது தேவையற்றது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டில் பெண்கள் பங்கேற்றால் அவர்களின் உடல், முகம் ஆகியவை மூடப்படாது. அனைவரும் பார்க்கும் வகையில் உடல் உறுப்புகள் தெரியக்கூடும். இதுபோன்று பெண்கள் ஆடை அணிவதை இஸ்லாம் அனுமதிப்பதில்லை.  


இன்றைக்கு இருக்கும் காலகட்டங்களில் ஊடக உலகத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக பகிரப்படுவதால், இதனை அனைவரும் பார்க்கக் கூடும். இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய அரசு, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை பெண்கள் விளையாடுவதை அனுமதிக்காது. இப்போதுள்ள சூழலில் பெண்கள் கிரிக்கெட் மட்டுமல்ல எந்த விளையாட்டும் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல என்று அவர் கூறியுள்ளார். பெண்களிடம் இருக்கும் திறமைகளை பார்க்காமல், அவர்களுடைய ஆடைகளை வைத்து பெண்களுக்கு இத்தகைய உரிமைகள் மறுக்கப்படுவது நிச்சயம் வேதனைக்குரிய செய்தி தான்.   

Input & image courtesy:TOI


Tags:    

Similar News