ஷரியத் படி பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்ற தடை விதித்த தாலிபான்கள் !

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கும் தடை விதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்று பெண் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-20 09:45 GMT

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்னர் பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கும் தடை விதித்துள்ளனர். இதனால் தாங்கள் பணியாற்றும் இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்று பெண் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெறியேறத் தொடங்கிய பின்னர் தாலிபான் தீவிரவாதிகள் பல்வேறு மாகாணங்களைக் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து தலைநகர் காபூலையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடிய நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் தாலிபான்கள் சார்பில் ஊடகங்களை சந்தித்து பேசியதாவது: கடந்த 1995ம் ஆண்டு ஆட்சியின்போது இருந்த நிலை தற்போது இருக்காது. பெண்களுக்கு தேவையான உரிமைகள் வழங்கப்படும். கல்வி கற்பதற்கும் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறியிருந்தனர். ஆனால் தற்போது பெண் பத்திரிகையாளர்களை பணியாற்ற விடாமல் தடை விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், ரேடியோ டெலிவிஷன் ஆப்கானிஸ்தான் (ஆர்டிஏ) சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ஷப்னம் கான் டாவ்ரன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவு: ஷரியத் சட்டப்படி செயல்படுவோம் என தாலிபான்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் பெண்களின் உரிமையை அவர்கள் மதிக்காமல், நான் பணியாற்றும் சேனல் அலுவலகத்துக்கு செல்லவிடாமல் தாலிபான்கள் தடுக்கின்றனர். நான் பணிக்கு செல்ல வேண்டும் ஆனால் தாலிபான்கள் அனுமதிக்கவில்லை.

மேலும், ஆட்சி மாறிவிட்டது இனிமேல் நீங்கள் பணியாற்ற முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக பெண் பத்திரிகையாளர் கூறினார்.

Source: Hindu Tamil

Image Courtesy: Hindu Tamil

https://www.hindutamil.in/news/world/706959-afghan-women-journalists-say-they-are-now-being-barred-from-working.html

Tags:    

Similar News