எப்படியும் எங்களை கொலை செய்து விடுவார்கள் தலைமறைவாக வாழும் 200 பெண் நீதிபதிகள் - ஆப்கானில் அடிப்படைவாதிகளின் அட்டகாசம் !

Over 200 female Afghan judges trapped in hiding are at risk of being 'killed by Taliban'

Update: 2021-09-16 14:36 GMT

Women assemble to call for their rights under Taliban rule at a protest in the capital of Kabul in early September

(AP)

பெண்கள் விஷயத்தில் கெடுபிடி காட்டும் தலிபான்களுக்கு அஞ்சி, கைதிகளுக்கு தண்டனை விதித்த பெண் நீதிபதிகள் சுமார் 200 பேர் உயிருக்கு பயந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் தி இண்டிபெண்டண்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத பெண் நீதிபதி ஒருவர் கூறுகையில், நான் வசித்து வந்த பகுதியில் இருந்து, வேறு இடத்தில் தலைமறைவாக இருக்கிறேன். எனது பகுதிக்கு சென்ற தாலிபான்கள், "இங்கே பெண் நீதிபதிகள் யாரேனும் வசிக்கிறார்களா?" என விசாரித்துள்ளனர்.

தாலிபான்கள் என்னை கண்டுபிடித்துவிட்டால் நிச்சயம் என்னை கொலை செய்துவிடுவார்கள். தற்போது நான் வசிக்கும் பகுதிகளுக்கு வந்த தாலிபான்கள் இங்கு முன்னாள் அரசு அதிகாரிகள், பெண் ஊடகவியலாளர்கள் யாரும் வசிக்கிறார்களா என கேட்டுச் சென்றனர்.

8 மாதங்களுக்கு ஒரு பயங்கரவாதி அவனுடைய மனைவியை வன்கொடுமை செய்ததற்காக என்னால் தண்டனை பெற்றான். அவன் என்னை கொடுமைப்படுத்துவதற்காக தேடி வருவதாக கேள்விப்பட்டேன்.

நான் அவனுக்கு தண்டனை கொடுக்கும்போதே, நான் வெளியே வரும் போது உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறினார். அப்போது இதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை, ஆனால் இப்போது வெளியே வந்த பின் என்னை தொடர்பு கொண்டு மிரட்டினான், தொடர்ந்து மிரட்டி வருகிறான் என அந்த பெண் நீதிபதி தெரிவித்தார்.

Tags:    

Similar News