பட்டினியால் வாடும் குழந்தைகள் ! வீட்டு உபயோகப் பொருட்களை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் மக்கள் !
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் சரிந்து விட்டது. பல்வேறு உலக நாடுகள் உதவியை நிறுத்தியதால் அங்குள்ள மக்கள் பட்டினியாலும், பணமில்லாமலும் வறுகையில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.;
ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அந்நாட்டு பொருளாதாரம் மிகவும் சரிந்து விட்டது. பல்வேறு உலக நாடுகள் உதவியை நிறுத்தியதால் அங்குள்ள மக்கள் பட்டினியாலும், பணமில்லாமலும் வறுகையில் சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தங்கள் வீடுகளில் பயன்படுத்தி வரும் பொருட்களை தெருக்களில் போட்டு விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வரும் நிலைக்கு காபூல் நகர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அந்நாட்டில் தாலிபான்களுக்கு அஞ்சி வங்கிகள் பூட்டப்பட்டதால், தாங்கள் சேமித்த பணத்தைக்கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாத நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர், மேலும், காபூல் நகரிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் வெளியேறி வருவதாலும், வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்படுவதாலும் மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். இதனால் பணத்திற்கு திண்டாடும் நிலைக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறிவிட்டது.
இந்நிலையில், காபூல் சம்மன் இ ஹசோரி பார்க் பகுதியில் ஏராளமான மக்கள் தங்களின் வீடுகளில் பயன்படுத்தி வரும் பிரிட்ஜ், எல்.இ.டி. டி.வி., மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். குறைந்த விலைக்கு பொருட்களை விற்றால் போதும், தங்களின் குழந்தைகளின் பசியை ஆற்றிவிடலாம் என்ற நிலைக்கு ஆப்கன் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே உலக நாடுகள் உடனடியாக ஆப்கான் மக்களுக்கு உதவ வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar