திரும்பவும் சீனாவில் ஊரடங்கு: மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறதா?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டை அறிவித்த சீன அரசாங்கம்.

Update: 2021-08-01 13:09 GMT

கொரோனா வைரஸ் 2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. பின்னர் சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து சீனாவில் ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து விட்டதாக அரசு அறிவித்தது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். அதன் பின்னர் சில இடங்களில் கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபடி இருக்கிறது.


ஏற்கனவே ஜியாங்ஸ் மாகாணத்தில் கொரோனா பரவல் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஹூனா மாகாணத்தில் கொரோனா பரவி இருந்தது.இதற்கிடையே சீனாவின் நான்ஜிங் நகரில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று தலைநகர் பிஜீங்குக்கும், 5 மாகாணங்களுக்கும் பரவத் தொடங்கி உள்ளது. உகான் நகருக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் நோய் தொற்று பரவுவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்பிறகு இதுவரை 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பரவி இருப்பது தெரியவந்துள்ளது.


இதையடுத்து நான்ஜிங் நகரில் இருந்து வரும் விமானங்கள் அனைத்தும்  ஆகஸ்டு 11-ந் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்நகரில் வசிக்கும் 90 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே சீனாவின் புஜியான் மற்றும் சொங்கிங் நகராட்சி ஆகிய பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அங்கு புதிதாக 55 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

Input: https://www.ndtv.com/world-news/china-tests-millions-imposes-new-travel-restrictions-as-coronavirus-cases-rise-2499944

Image courtesy: NDTV news 


Tags:    

Similar News