2000 கிலோமீட்டர் தூரம் இலக்கை சரியாக அழிக்கும் அக்னி ப்ரைம் - சோதனை வெற்றி

2000 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் அக்னி பிரேம் ஏவுகணை சோதனை வெற்றி.

Update: 2022-10-23 03:22 GMT

இந்தியாவில் தற்போது ராணுவத்தில் பல்வேறு நவீன தளவாடங்கள் குறிப்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட தளவாடங்களை அதிகமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ராணுவ துறையை பயப்படுத்தும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ராணுவத்துறை மட்டும் இன்றி கடல் கடல் துறை வலுப்படுத்தும் முயற்சிகளிலும் தற்போது ஈடுபட்டுள்ளது.


INS விக்ராந்த் நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது என்பது பிரதமர் மோடி அவர்களின் அரசாங்கத்தின் மிகப்பெரிய பொறுப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை நடுத்தர ரக பாலஸிக் ஏவுகணை காண அக்னி பிரேம் ஏவுகணை சோதனை சோதித்து பார்க்கப்பட்டதும். ஒடிசா கடலோரத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் இச் சோதனை நடந்தது மொபைல் லாஞ்சரில் இருந்து இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது. அது செல்லும் பாதை ரேடர்கள் மூலமாக உள்ளிட்ட சாதனங்களால் கண்காணிக்கப்பட்டுள்ளது.


அனைத்து அம்சங்களும் சிறப்பாக செயல்பட்டன இந்த ஏவுகணை சுமார் 1000 கிலோ ஆயிரம் கிலோ மீட்டர் முதல் 2000 கிலோமீட்டர் வரை பாய்ந்து சென்று இலக்குகளை சரியாக தாக்கப்படுவது. இதற்கு முன்பு கடைசியாக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அன்று இந்த சோதனை வெற்றிகரமாக நடந்தது. தற்பொழுது மீண்டும் அக்னி பிரேம் ஏவுகணை சோதனை மிகக் கச்சிதமாக வெற்றியடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கடற்பரைக்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஒரு ஏவுகணை நிச்சயம் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.

Input & Image courtesy: News

Tags:    

Similar News