அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றி!
அக்னிக்குல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அக்னிபான் ராக்கெட் சோதனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் முதல் தனியார் ராக்கெட் அக்னிபான்-ஐ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. சென்னையைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சி ஸ்டார்ட் அப் நிறுவனம் அக்னிகுல் காஸ்மோஸ் சென்னை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து சிறிய ரக ராக்கெட் ஏவுதல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2017- ஆம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி யைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களால் துவங்கப்பட்ட அக்னிகுல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக சிங்கிள் பீஸ் 3d பிரிண்டட் செமி கிரியோ ஜெனிக் ராக்கெட்டை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில் ஆந்திரா, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவு தளத்திலிருந்து நேற்று காலை 7:15 மணிக்கு அக்னி பான் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது .இஸ்ரோ தலைவர் சோம்நாத் இந்த செயல்முறையை மேற்பார்வையிட்டார். இது உள்நாட்டு உற்பத்தியில் தயாரான 3டி பிரிண்டெட் செமி கிரையோஜெனிக் என்ஜின் அடிப்படையிலான ராக்கெட் ஆகும். பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் காரணமாக இந்த ராக்கெட் ஏவுதல் திட்டம் 4 முறை கைவிடப்பட்ட நிலையில் , ஐந்தாவது முறையாக வெற்றிகரமாக சோதனை நடந்தது. இரண்டடுக்கு ஏவுதல் திறன் கொண்ட இந்த ராக்கெட் 300 கிலோ எடையும் 700கி.மீ தூரம் பயணிக்க கூடிய திறனும் கொண்டது .திரவ மற்றும் வாயு எரிபொருளைக் கொண்டு செமி கிரயோஜெனிக் எஞ்சின் மூலம் இந்த ராக்கெட் இயங்குகிறது.
SOURCE: Dinamani