பழமைவாய்ந்த பசுபதீஸ்வரர் கோவில் விவசாய நிலத்தின் செம்மண்ணை அப்புறப்படுத்தும் அன்னியர்கள்!

பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செம்மண்ணை அப்புறப்படுத்த பணியில் அன்னியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

Update: 2022-04-05 01:59 GMT

தமிழ்நாடு பல்வேறு பழமை வாய்ந்த கோவில்களில் சிறந்த புகலிடமாக விளங்குகிறது. கோவில்களின் எண்ணிக்கையில் சிறந்து விளங்கும் தமிழகத்திற்கு அதனுடைய பழமைகளை தற்போது இழந்து வருகிறதா? என்ற கேள்வியும் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் தற்பொழுது தமிழக அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. சமீபத்தில் பல்வேறு ஆக்கிரமிப்புகளையும் மற்றும் கோவில் சொத்துக்களின் மீது அபகரிப்பு தொடர்பான விஷயங்களையும் தமிழக அரசு தீவிர விசாரணை செய்து வருகிறது. 


அந்த வகையில் தற்பொழுது மிகவும் பழமையான கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மணலை ஆக்கரமிப்பு செய்வது குறித்து தமிழக அரசிற்கு நடவடிக்கை எடுக்குமா? என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. பந்தநல்லூர் பழமை வாய்ந்த ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 200 ஏக்கர் விவசாய நிலத்தில் மதிப்புமிக்க செம்மண்ணை சில அன்னியர்கள் அப்புறப்படுத்த முயற்சிக்கிறார்கள். மேலும் இது குறித்து தன்னுடைய கருத்தை ட்விட்டர் பக்கத்தில் T.R.மகேஷ் அவர்கள் பதிவிட்டுள்ளார். 



விவசாய நிலத்தில் உள்ள மண்ணை அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை என்ன வந்தது? அல்லது மணலை சட்டத்திற்கு புறம்பாக செயல்களை செய்வதற்கு ஈடுபடுத்துகிறார்கள் அவர்கள் யார்? அவர்கள் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்பது குறித்து தமிழக அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பல்வேறு நபர்களின் கோரிக்கைகள் ஒன்றாக இருந்து வருகிறது. 

Input & Image courtesy:  Twitter Source

Tags:    

Similar News