உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு!

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-07 14:50 GMT

உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்களிப்பை ஐந்து மடங்கு அதிகரிக்க இந்தியா இலக்கு நிர்ணயத்துள்ளது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர்  ஜிதேந்திரசிங் தெரிவித்தார்.


அகமதாபாத்தில் ஐ.என். ஸ்பேஸ் தொழில்நுட்ப மையத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போது 8 பில்லியன் டாலராக உள்ளது என்றும், ஆனால் 2040 ஆம் ஆண்டில் இது பல மடங்கு அதிகரிக்கும் என்பதும் எங்களுடைய கணிப்பு என்றும் கூறினார்.


ஆனால் மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சில சர்வதேச பார்வையாளர்களின் கூற்றுப்படி உதாரணமாக அண்மையில் வெளியிடப்பட்ட ஏ.டி.எல் அறிக்கையின்படி 2040 ஆம் ஆண்டுக்குள் நூறு பில்லியன் டாலர் திறனை கொண்டிருக்க கூடும் என்று குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி விண்வெளித்துறையை பொது தனியார் பங்கேற்புக்கு அனுமதித்ததன் மூலம் கடந்த காலத்தின் தடைகளை உடைத்துள்ளார் என்று அவர் கூறினார்.



SOURCE :Kaalaimani.com

 


Similar News