அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியத்துக்கான வழி முறைகள்: 50 கோடி பேர் பயனடையும் மசோதா நிறைவேறியது!!

அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியத்துக்கான வழி முறைகள்: 50 கோடி பேர் பயனடையும் மசோதா நிறைவேறியது!!

Update: 2019-07-31 06:31 GMT

நாட்டில் உள்ள அனைத்து தனியார் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களின் சம்பள பிரச்னைகளுக்கு தீர்வு காணும், சம்பள விதிமுறை மசோதா,லோக்சபாவில் நிறைவேறியது.  இதன் மூலம் அரசு நிர்ணயிக்கும் குறைந்த பட்ச ஊதியத்தை குறிப்பிட்ட நாளில் காலதாமதமில்லாமல் வழங்கும் முறை உருவாகும், இதனால் 50 கோடி பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  


சம்பளம் அல்லது கூலி நிர்ணயம் தொடர்பாக, தற்போதுள்ள மசோதாவில், அரசு அங்கீகரித்த பட்டியலில் உள்ள சில தொழில்களில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே, பலன் கிடைக்கிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நாடு முழுவதும், அனைத்து வகையான தொழில்களில் ஈடுபட்டுள்ள, 50 கோடி தொழிலாளர்கள் பயனடையும் வகையிலான, சம்பள விதிமுறை மசோதா, லோக்சபாவில் நேற்று(ஜூலை 30), குரல்ஓட்டெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.


இந்த மசோதாவின் படி, தொழிலாளர்கள் அல்லது ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி அல்லது சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தாமதமாக சம்பளம் கொடுக்கப்படும் பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.


Similar News