மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்திலும் தமிழில் பேச அனுமதி! வெங்கையா நாயுடு வழங்கினார்!!

மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்திலும் தமிழில் பேச அனுமதி! வெங்கையா நாயுடு வழங்கினார்!!

Update: 2019-07-23 07:10 GMT


நாடாளுமன்ற இருஅவைகளிலும் விவாதங்களின்போது தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழியில் பேச அனுமதி உள்ளது. ஆனால், பூஜ்ஜியநேரத்தில் இம்மொழியில் பேச மாநிலங்களவையில் மட்டும் இதுவரை அனுமதி இல்லாமல் இருந்தது.


இந்த சூழலில், கடந்த ஜுன் 26-ஆமே தேதி மாநிலங்களவையின் பூஜ்ஜிய நேரத்தில் கர்நாடகா பா.ஜ.க. உறுப்பினர் ஜி.சி.சந்திரசேகர் கன்னட மொழியில் ஒரு பிரச்சனையை எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் அதற்கு கன்னடத்தில் பதில் அளித்தார். இதை தாய்மொழியில் அனுமதி இன்றி பேசியதாக குறிப்பிட்ட துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, பூஜ்ஜிய நேரத்திலும் பிராந்திய மொழியில் பேசலம் என்று அனுமதி வழங்கினார்.


ஆனால், இதற்கு முன்னதாகவே அனுமதி பெறவேண்டும் எனவும், அப்போதுதான் அதற்கான மொழிபெயர்ப்பாளரை அமர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார். மக்களவையில் பூஜ்ஜியநேரத்திலும் தம் தாய்மொழியில் பேச ஏற்கனவே அனுமதி உள்ளது.


இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணைப் பிரிவில் இடம்பெற்ற 22 இந்திய மொழிகள் உள்ளன. இவற்றில், அசாமி, பெங்காலி, குஜராத்தி, இந்தி, தமிழ், கன்னடம், மராத்தி, தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, மலையாளம் மற்றும் உருது ஆகிய 12 மொழிகளுக்கு மட்டும் மாநிலங்களவையில் நிரந்தர மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.


கடந்த வருடம் ஜூலையில் துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டபின், 22 மொழிகளில் பேச மாநிலங்களவையில் அனுமதி அளிப்பதாக அறிவித்தார். 


இந்நிலையில், கடந்த வாரம் 4 ஆம் தேதி பூஜ்ஜிய நேரத்தில் ஒரு பிரச்சனையை எழுப்பிய அதிமுக உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ் தமிழில் பேசும் வாய்ப்பை முதல்நபராக பயன்படுத்திக் கொண்டார். இதையடுத்து, அதிமுகவின் மற்றொரு உறுப்பினரான கே.ஆர்.அர்ஜுனனும் தமிழில் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar News