தடைகளை தாண்டி திறமைகளை வெளிப்படுத்தும் சிங்கப்பெண்கள்.. மோடி அரசு முயற்சிக்கு பாராட்டு..

Update: 2024-05-19 11:35 GMT

இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்திப் பிரகாசிக்கின்றனர். டெல்லி துவாரகாவின் யசோபூமியில் 2024 மே 15 முதல் 19-ம் தேதி வரை இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளில் பெண்களின் பங்கேற்பு தற்போது அதிகரித்து வருகிறது. பெண் பங்கேற்பாளர்கள் ஆண்களுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு உற்சாகத்துடன் திறன்களை வெளிப்படுத்துகின்றனர். திறமைக்குப் பாலின எல்லைகள் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர். இந்த ஆண்டு இந்தியா ஸ்கில்ஸ் போட்டி, 61 திறன் பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் வலைதள தொழில்நுட்பம், ஆடை வடிவமைப்பு, வரைகலை தொழில்நுட்பம், வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல், மின் கட்டமைப்புகளை நிறுவுதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பிரிவுகளில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை இப்போட்டி வழங்குகிறது.


இந்தியா ஸ்கில்ஸ்- 2024 போட்டியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும் இதில் அவர்கள் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்துவதாகவும் இந்தியா ஸ்கில்ஸ் 2024-ன் நடுவர் குழு உறுப்பினர் சோனு லாதர் கூறினார்.


மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது. இது மே 19 அன்று ஒரு பிரமாண்டமான விழாவுடன் நிறைவடையும். ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் இணைய தளத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் இப்போட்டிக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 26,000 பேர் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் இருந்து சுமார் 900 பேர் இந்தியா ஸ்கில்ஸ் தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News