ஊடகங்களை சந்திக்காதது ஏன் ?- பிரதமர் மோடி விளக்கம்!
ஊடகங்கள் நடுநிலைமையாக இல்லை என்றும் அதனால் தான் ஊடக சந்திப்பு நடத்தவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நடுநிலையுடன் இருக்க வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு இல்லை. எனவே தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு எதையும் நடத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் .தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்று கடந்த பத்தாண்டு காலமும் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தாதது பற்றி கேட்டபோது மேற்கண்டவாறு பதில் அளித்துள்ளார் .
பத்திரிகையாளர்கள் தங்களுடைய பார்வையும் கொள்கைகளையும் தான் முன்னிறுத்துகிறார்கள். பாராளுமன்றத்துக்கு தான் நான் பதிலளிக்க வேண்டியவன் என்று பத்திரிகையாளர்கள் அவரவர் விருப்பங்களுடன் அடையாளம் காணப்படுகிறார்கள். இப்போது எல்லாம் ஊடகங்கள் பக்க சார்பு அற்றவையாக இல்லை. இப்போது மக்களுக்கு உங்களுடைய நம்பிக்கைகள் என்னவென்பது பற்றியும் தெரியும். முன்பெல்லாம் ஊடகம் முகமற்றவையாக இருந்தது. யார் எழுதுகிறார்கள் அதன் கொள்கை என்ன யாரும் அதைப்பற்றி முன்னர் கவலைப்பட்டதில்லை .இனியும் நிலைமை அவ்வாறு இல்லை.
அரசியலில் செயல்பாடுகள் பற்றி கவலை படாமல் ஊடகங்களை கையாளுவதை மையப்படுத்தி செயல்படுகின்ற புதிய கலாச்சாரம் உருவாகி இருக்கிறது. இந்த பாதையில் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நானும் விஞ்ஞான்பவனில் ரிப்பன் வெட்டி புகைப்படம் எடுத்துக் கொள்ள முடியும் என்றாலும் ஜார்கண்டில் உள்ள ஒரு சிறிய மாவட்டத்தில் ஒரு சிறிய திட்டத்துக்காக செல்கிறேன். புதியதொரு பணி கலாச்சாரத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன் .அதை ஒப்புக் கொள்வதா இல்லையா என்பதை ஊடகங்கள் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார் பிரதமர்.
SOURCE :Dinaboomi