சர்வதேச யோகா தினம்.. பிரதமர் மோடி எடுத்து முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..

Update: 2024-05-19 11:37 GMT

முதன்முதலில் 2014ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான் ஐக்கிய நாடுகள் சபையின் 69வது கூட்டத்தில் செப்டம்பர் 24ம் தேதி மனிதர்களின் உடல், மனம் உள்ளிட்ட ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் யோகாவை பரப்பும் வகையில் சர்வதேசிய நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கடைப்பிடிக்கப்படும் என ஐநா சபை 2014-ல் அறிவித்தது. ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப் படுகிறது. இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, புதுதில்லியில் கிருஷி பவன் அருகே உள்ள கடமைப் பாதையில் சர்வதேச யோகா தினத்துக்கான கவுண்ட் டவுன் நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் யோகா பயிற்சியாளர்களின் பயிற்சியின் அடிப்படையில், நுகர்வோர் விவகாரங்கள் துறைச் செயலாளர் நிதி கரே மற்றும் துறையின் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பயிற்சியாளர்கள் பலவிதமான ஆசனங்கள், சுவாச பயிற்சிகள் மற்றும் தியான முறைகளை பயிற்றுவித்தனர்.


இந்த கவுண்ட் டவுன் நிகழ்ச்சி யோகாவை அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. முழுமையான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்ட யோகா பயிற்சிகள் தொடர்பாக இந்த நிகழ்வில் விளக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி கரே உரையாற்றுகையில், மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலுக்கு நன்றி தெரிவித்தார்.


ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகாவின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். யோகாவை நுகர்வோர் விவகாரங்கள் துறை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று அவர் கூறினார். நோயற்ற மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்க்கையில் யோகாவை பின்பற்ற வேண்டும் என்று நிதி கரே வலியுறுத்தினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News