உக்ரைன் மீது ரஷ்ய 7வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல நகரங்களில் இடைவிடாமல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதற்கு இடையில் சமரச பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீதான தாக்குதலை இன்று காலை முதல் தீவிரப்படுத்தியுள்ளது.
இதனால் பல முனைகளில் இருந்து ஆக்ரோஷமான தாக்குதல்களை ரஷ்ய படைகள் நடத்தி வருகிறது. இதனை தடுக்கின்ற வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதில் பல ரஷ்ய ராணுவ வீரர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது நடைபெற்று வந்த போரில் ரஷ்ய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Daily Thanthi