இன்ஸ்டாகிராமில் மூலம் கூடா நட்பு: போதை பொருளுக்கு ஈடாக பள்ளி மாணவியை கற்பழித்த கும்பல்.!
இன்ஸ்டாகிராமில் மூலம் கூடா நட்பு: போதை பொருளுக்கு ஈடாக பள்ளி மாணவியை கற்பழித்த கும்பல்.!
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் மூலம் 14 வயது நிரம்பிய சிறுமி கூடாநட்பின் காரணமாக பல மாத காலங்களாக, போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளார். அதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர் அந்த சிறுமியை தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பாலியல் பலாத்காரம் செய்து கொண்டு வந்துள்ளார். முஸ்லீம் பெரும்பான்மை கொண்ட கேரளாவில், மலப்புரம் மாவட்டத்தில் கல்பகஞ்சேரி என்ற இடத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பாக 14 வயது சிறுமியின் உறவினர் அளித்த புகாரின் பேரில், வெறும் இரண்டு பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்த முஹம்மது அஃப்லா மற்றும் முஹம்மது ரபீக் என்ற இருவரை போலீசார் விசாரித்து வருகின்றனர் முக்கிய குற்றவாளிகள் தப்பித்து விட்டனர் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் வேலை செய்கிறார். வைரஸ் காரணமாக ஊரடங்கு காலத்தில், பள்ளி வகுப்பில் அனைத்து ஆன்லைனில் நடைபெற்ற காரணத்தினால் இவருக்கும் இவருடைய வீட்டின் சார்பாக மொபைல் வாங்கித் தரப்பட்டது. இதன் மூலம் தான் இவர் இன்ஸ்டாகிராமில் மூலம் டீனேஜ் ஆண்களுடன் பல மாதங்களாக சாட் செய்து வந்துள்ளார். பிறகு அந்த நபர் அந்தப் பெண்ணினுடைய வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் வந்துள்ளார். இதனை இந்த பெண் தன்னுடைய தாயிடம் கூறவில்லை. சில நாட்களுக்குப் பிறகு இந்த கூட நட்பின் காரணமாக அந்த நபர் இந்த பெண்ணுக்கு போதை பொருளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். சில மாதங்களாக போதைப் பொருளை பயன்படுத்தி அந்த பெண் அதற்கு அடிமையாகி விட்டார்.
இப்படி அடிமையாக்கி அந்த பெண்ணை தன்னுடைய சொந்த லாபத்திற்காக அந்த குற்றம்சாட்டப்பட்டவர் பயன்படுத்தி உள்ளார். தன்னுடைய நண்பர்களையும் அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவழைத்து அந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்துள்ளார் அடுத்து சில மாதங்களுக்குப் பிறகு தன்னுடைய நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட அந்த பெண் இதை தன்னுடைய வீட்டில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அந்த பெண் வீட்டில் உள்ளவர்கள் சைல்ட்லைனில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த சிறுமிக்கு முதலில் கஞ்சா, பின்னர் ஹாஷிஷ் எண்ணெய் மற்றும் கோகோயின் வழங்கப்பட்டதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். மேலும் அதிக ஊசி மருந்துகள் வழங்கப்படும் என்று அவருக்கு உறுதியளிக்கப்பட்டது. போதைப்பொருள் மாஃபியாவால் அடிமைப்படுத்தப்பட்ட இதுபோன்ற பல பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக இப்போது சைல்ட்லைன் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.