மீண்டும் அமெரிக்காவை கைக்குள் கொண்டு வரும் கொரோனா: அதிகரிக்கும் எண்ணிக்கை !

அமெரிக்காவில் முன்பு இருந்ததை போல, தற்பொழுது வீரியமடைந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-08-10 13:09 GMT

கொரோனா பரவ தொடங்கிய காலகட்டங்களில் இருந்த அமெரிக்கா மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை எதிர்கொண்டது குறிப்பாக பல மில்லியன் கணக்கான மக்களை இது தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது ஆனால் தடுப்பூசி கண்டுபிடித்து அதற்கு பிறகு பாதிப்புகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியது இந்நிலையில் கடந்துசெல்ல வாரங்களாக பாதிப்புகள் எண்ணிக்கை உச்சமடைந்தன. இதனால் காரணத்தினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


உலகம் முழுவதும் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் டெல்டா வைரஸ் பரவல் அங்குள்ள மருத்துவ சுகாதார கட்டமைப்பை திக்கு முக்காட வைத்துள்ளது. டெக்சாஸ் மாகாண பொது சுகாதார மருத்துவ இயக்குநர் டெஸ்மர் வாக்ஸ் இதுபற்றி கூறுகையில், மாகாணத்தின் தலைநகரான ஆஸ்டினில் 24 லட்சம் பேர் வாழ்கின்றனர்.


இங்குள்ள மருத்துவமனையில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மருத்துவ கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை சந்தித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சை கருவிகளும் அங்கு குறைவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Input: https://www.cnn.com/2021/08/08/us/five-figures-us-summer-covid-surge/index.html

Image courtesy: CNN news 




Tags:    

Similar News