அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், அமெரிக்கா உளவுத்துறை அதிகாரி லெப்டினன்ட் கஜெனரல் ஸ்காட் பேரியர் இந்தியா, பாகிஸ்தான் உறவு தொடர்பாக உரையாற்றினார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவு மோசமாகியுள்ளது. இந்தியாவின் ஆணு ஆயுதங்கள், ராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக பார்க்கிறது.
மேலும், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தன்னுடைய ராணுவத்துக்கு பயிற்சி அளித்து வருகிறது. அது மட்டுமின்றி ஆணு ஆயதங்களையும், நவீனப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இவ்வாறு அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Source: Malaimalar
Image Courtesy:Modern Diplomacy