அந்தமான் சிறையில் சாவர்க்கர் உருவப்படத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை !
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று (அக்டோபர் 15) அந்தமான் சென்றுள்ளார். அந்தமானில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வு செய்வதற்காக இப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.;
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்று (அக்டோபர் 15) அந்தமான் சென்றுள்ளார். அந்தமானில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்வு செய்வதற்காக இப்பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.
நேற்று மாலை அந்தமான் தலைநகர் போர்ட்பிளேர் விமான நிலையத்தில் அவர் சென்ற விமானம் தரையிறங்கியது. அப்போது விமானநிலையத்தில் துணை நிலை ஆளுநர் டி.கே.ஜோஷி, குல்தீப்ராய் சர்மா எம்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சிறிது நேர ஓய்வுக்கு பின்னர் அங்குள்ள புகழ்பெற்ற சிறைச்சாலைக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.
அப்போது சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு மலர் வளையம் வைத்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செய்தார். இதன் பின்னர் பசுமை சுற்றுலா மற்றும் நீர் விமான போக்குவரத்து உள்ளிட்ட திட்டங்களை ஆய்வு மேற்கொள்கிறார். இன்றும், நாளையும் பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: ANI