“அமித்ஷாவின் ஆப்ரேஷன் காஷ்மீர்”!கலவர தடுப்பு அதிரடிப்படை விரைந்தது! அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டன! ராணுவ கட்டுப்பாட்டில் காஷ்மீர்!!

“அமித்ஷாவின் ஆப்ரேஷன் காஷ்மீர்”!கலவர தடுப்பு அதிரடிப்படை விரைந்தது! அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டன! ராணுவ கட்டுப்பாட்டில் காஷ்மீர்!!

Update: 2019-08-03 09:40 GMT


கடந்த இரு வாரங்களாக காஷ்மீர் மாநிலத்தில் கடும் பீதி நிலவுகிறது. ஏற்கனவே, அங்கு ஆயிரக்கணக்கான துணை ராணுவத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த வாரம் 10 ஆயிரம் பாதுகாப்புப்படை வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், மேலும் 35 ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்களை காஷ்மீருக்கு அனுப்பி உள்ளனர்.


காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரை பயணிகள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோரை, உடனடியாக மாநிலத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல காஷ்மீரில் படித்துவரும் மாணவர்களையும், காஷ்மீரி அல்லாத மக்களையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.





காஷ்மீரில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஆயுதப்படை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் கலவர தடுப்பு அதிரடிப் படைகளும் காஷ்மீருக்கு விரைந்து உள்ளது.  மத்திய பாதுகாப்பு படையின் சிறப்பு அதிரடி படை வீரர்கள், கலவர தடுப்புகளில் திறமை வாய்ந்தவர்கள்.




https://twitter.com/ANI/status/1157531218856108032?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1157531218856108032&ref_url=https://www.opindia.com/2019/08/jammu-and-kashmir-crpfs-rapid-action-force-reaches-jammu-amidst-reports-of-major-troops-movement/



ராணுவ கட்டுப்பாட்டில் காஷ்மீர் மாநிலம் கொண்டுவரப்பட்டுள்ளது. காஷ்மீருக்குள் நுழையும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, காஷ்மீருக்குள் இருந்து வெளியேறும் சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. 





காஷ்மீருக்கு வெளியில் இருந்து காஷ்மீர் மாநிலத்தை சாராதவர்களை அனுமதிப்பதில்லை.


எந்த நேரத்திலும் காஷ்மீர் மாநிலம் முழுதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு பதற்றம் நிலவுகிறது.





மொத்தத்தில் காஷ்மீர் மாநிலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் வந்தது.


Similar News