பெண் ஊழியர்களுக்காக இதுவரை யாருமே செய்யாத சிறப்பான சலுகை வழங்கி அசத்திய பெண் தொழிலதிபர்!
இந்தூரில் செயல்படும் சாய் சுத்தாபார் நிறுவனத்தின் பெண் தொழிலதிபர் ஒருவர் பெண்களுக்காக மாதவிடாய் கால விடுமுறை வழங்கி அசத்தியிருக்கிறார்.
நவீன காலங்களில் ஆணுக்கு நிகராக பெண்ணும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். பல துறைகளிலும் பெண்கள் வேலைக்கு சென்று தன் திறமையை நிரூபித்து தக்க வருமானத்தையும் ஈட்டி தன் குடும்பத்தை பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகித்து கொண்டிருக்கின்றனர் .அப்படிப்பட்ட பெண்கள் எப்பொழுதுமே போற்றுதலுக்கு உரியவர்கள் தான். ஒரு பெண் வெளியில் சென்று சம்பாதிக்கவே இல்லை என்றால் கூட இல்லத்தரசியாகவே இருந்து கொண்டு வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு தன்னால் முடிந்த சொற்ப வருமானத்தையும் ஈட்டி குடும்பத்தைப் பேணும் பெண்களும் பலர் உண்டு.
கணவன் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளில் பாதி பகுதியை வீட்டு வேலைகளுக்காகவும் குழந்தைகளை பராமரிப்பதற்காகவும் தன் கணவனுக்கு வேலைகள் செய்வதிலுமே பல பெண்கள் அர்ப்பணித்து விடுகிறார்கள். அதுவும் ஒரு வகையில் தன் குடும்ப முன்னேற்றத்திற்கான பங்கு ஆதாரம் தான். பல குடும்பங்கள் தன் வீட்டின் வேலைகளை ஆணும் பெண்ணும் சமமாக பகிர்ந்து கொண்டும் தன் வாழ்வின் சூழல் இப்படி இருக்கிறது நாம் இப்படி செயல்பட வேண்டும் என்று சரியான முறையில் வாழ்க்கை நடத்திச் செல்லும் பொழுது அவர்கள் வெற்றியடைந்த தம்பதிகளாகின்றனர்.
அவற்றை விடுத்து தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் குறை கூறிக் கொண்டும், தேவையற்ற கோளாறுகளை உருவாக்கிக் கொண்டும் தங்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு காரணமாக யாரேனும் ஒரு மூன்றாவது நபரை அனுமதித்தும் வாழ்க்கையை தொலைத்தவர்களும் ஏராளம். இப்படி வாழ்க்கை என்பது ஆணும் பெண்ணும் சேர்ந்து இயங்குவதே என்பதனால் நவீன காலங்களில் பல பெண்கள் தங்கள் கல்வி கேற்ற வேலையைத் தேடி பல நிறுவனங்களில் வேலைக்குச் சென்று வரும்போது சில அசவுகர்யமான சூழலுக்கும் அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. அவற்றில் ஒன்றுதான் பெண்கள் மாதமாதம் சந்திக்கும் மாதவிடாய் கோளாறு.