மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம் - முதல்வர் மனைவி, மகள், மருமகன் பங்கேற்பு
மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகத்திற்கு துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ளது தான் பழமையான ஸ்ரீ அங்காள பரமேஸ்வரர் அம்மன் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோகுலை சுற்றிலும் பல்வேறு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முன்னிலையில் S.P. நிஷா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். இந்த கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக துர்கா ஸ்டாலின் அவர் வருகை புரிந்திருந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் முயற்சி நாம் இந்த கோவிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு புதியதாக கொடிமரம் விநாயகர் ராகு கேது விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் முடித்து கடந்த இரண்டாம் தேதி பூர்வாங்க பூஜகளும், முதல் காலை யாகசாலை பூஜைகளும் தொடங்கின. இந்த பூஜையில் தான் தற்போது அவர் பங்கு எடுத்து முன்னிலை நின்று வகித்து தந்துள்ளார்.
ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாரதனைகள் நடைபெற்றது. யாகசாலைகளில் கலச புறப்பாடு செய்யப்பட்டு கோவிலில் பலம் வந்து ராஜகோபுரம் அம்மாள் பரிவாரம் மூர்த்திகள் விமானங்களை அடைந்தது. துர்கா ஸ்டாலின் கொடி அசைத்து, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ராஜபட்டர் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரிகள் சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட கலசங்களில் இருந்து புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
Input & Image courtesy: Vikatan News