போராட்டம் தீவிரமாக தொடரும் ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு!

போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்று ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு விடுத்துள்ளன.

Update: 2023-10-05 05:00 GMT

அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர் சங்கங்களை திருப்தி படுத்தவில்லை. அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலேயே அவர்கள் போராட்டத்தை தொடர்வோம் என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். இது தொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜெ.ராபர்ட் கூறுகையில் மூவர் குழு ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது .

அரசியலுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அல்லது சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றார். பகுதி நேர சிறப்பாசிரியர் சங்கத்தின் நிர்வாகி ஜேசுராஜா கூறும்போது ஊதிய உயர்வு மருத்துவ காப்பீடு அறிவித்த அரசுக்கு நன்றி. ஆனால் எங்களை பகுதி நேர ஆசிரியர்களாக அல்லாமல் முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அது நிறைவேற்றப்படவில்லை .அதை நிறைவேற்றுவார்கள் என்று காத்திருக்கிறோம்.

எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.டெட் தேர்ச்சி பெற்று காத்திருக்கும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கூறுகையில் எங்களுடைய கோரிக்கையை அரசு ஏற்க கூட தயாராக இல்லை டெட் முடித்த எங்களை ரூபாய் பத்தாயிரம் சம்பளத்திற்கு கூட பணி அமர்த்த அரசு ஏற்கவில்லை. எங்கள் கோரிக்கைகள் எதுவும் முழுதாக ஏற்கப்படவில்லை . எனவே எங்கள் போராட்டம் நிச்சயம் தொடரும் என்றார்.

SOURCE :DAILY THANTHI

Similar News