கோடி கோடியாக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் தி.மு.க தேர்தல் நிதிக்காக கையேந்தினோம் - தி.மு.க அந்தரங்க தேர்தல் லீலைகளை போட்டு உடைத்த முன்னாள் தி.மு.க பொருளாளர் ஆற்காடு வீராசாமி #கார்ப்ரேட்கைக்கூலிதிமுக ?

கோடி கோடியாக கார்ப்ரேட் நிறுவனங்களிடம் தி.மு.க தேர்தல் நிதிக்காக கையேந்தினோம் - தி.மு.க அந்தரங்க தேர்தல் லீலைகளை போட்டு உடைத்த முன்னாள் தி.மு.க பொருளாளர் ஆற்காடு வீராசாமி #கார்ப்ரேட்கைக்கூலிதிமுக ?

Update: 2018-09-17 11:08 GMT

தந்தி தொலைகாட்சியில் ராஜபேட்டை என்ற நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பப்படுகிறது. ஹரிஹரன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் விருந்தினர்(பெரும்பாலும் அரசியல்வாதிகள்) அவர்களின் சொந்த வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் குறித்து கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். பெரும்பாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த உரையாடல்கள் இருக்கும்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தி.மு.க-வின் முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குக்கொண்டது ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆற்காட்டார் கூறிய சில விஷயங்கள் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

தி.மு.க-விற்கு தேர்தல் நேரத்தில் பொருளாளராக தனது அனுபவங்களை பகிரும் போது தேர்தல் செலவுகளுக்காக எந்தெந்த தொழிலதிபர்களை சந்தித்தேன், எவ்வளவு பணம் பெற்றேன் என்ற விபரங்களை இந்த நேர்காணலில் வெட்டவெளிச்சமாக போட்டு உடைத்துள்ளார் ஆற்காட்டார்.

அதுமட்டும் இன்றி, தான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கு எவ்வாறெல்லாம் உதவினார் என்பதையும் கூறியுள்ளார். இந்த தொழிலதிபரிடம் ஒவ்வொரு முறையும் கோடிக் கோடியாக தேர்தல் நிதி தான் பெற்றதாகவும் கூறுகிறார். ஆக, இவை இரண்டுக்கும் சம்பந்தம் உண்டா? லஞ்சத்தை தேர்தல் நிதி என்ற பெயரில் பெற்றனரா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

அது மட்டும் இன்றி, இந்த தேர்தல் வசூல்கள் தி.மு.க-வின் அதிகார தேர்தல் கணக்கில் காட்டப்பட்டனவா? ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் இந்த பணத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்யப்பட்டது? அவை அனைத்தும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு தேர்தல் கமிஷனிடம் ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்கப்பட்டதா? கார்ப்ரேட் நிறுவனங்களை நித்தமும் தற்போது ஆட்சியில் இல்லாத போது தூற்றிவரும் தி.மு.க-வினரும் ஸ்டாலினும் தமது கட்சி ஒவ்வொரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் தேர்தல் சமயத்தில் சென்று கையேந்தி கிடந்தது குறித்து விளக்கம் அளிப்பார்களா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு ஆற்காட்டார் நேர்காணல் வழிவகுத்துள்ளது. பதில்கள் வருமா அல்லது எப்போதும் போல் தி.மு.க பதில் அளிக்காமல் மெளனம் காக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்சமயம், டிவிட்டரில் தமிழக மக்கள் #கார்ப்ரேட்கைக்கூலிதிமுக என்ற இடுகையை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆற்காட்டார் நேர்காணலின் சர்ச்சைக்குரிய பகுதி இதோ:


Similar News