நீங்க பாசிட்டிவ்வா? நெகட்டிவா? இதெல்லாம் உங்களிடம் இருந்தால் தகர்த்தெரியுங்கள்..!

நீங்க பாசிட்டிவ்வா? நெகட்டிவா? இதெல்லாம் உங்களிடம் இருந்தால் தகர்த்தெரியுங்கள்..!

Update: 2019-12-04 06:06 GMT

நம் அனுபவங்களை சீராக ஒழுங்கமைக்கும் தன்மை நம் உணர்வுகளுக்கு உண்டு
என்று நம்புபவர்கள் நாம். இதிலிருக்கும் சிக்கலே , பெரும்பாலானோர் அதிகப்படியாக எதிர்மறையான
எண்ணங்களை, அது எதிர்மறையான
எண்ணம் என்ற விழிப்புணர்வே இன்றி வளர்த்து வருவது தான். இது ஒரு கட்டத்தில் எதிர்மறையாக
இருப்பதே அவர்களின் இயல்பு என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடுகிறது.


வெற்றிக்கு இடையூறாக பல எதிர்மறை எண்ணங்கள் நமக்கு தெரியாமலேயே நம்மிடம்
இருக்கலாம். அவற்றில் சில இங்கே தொகுக்கப்பட்டுள்ளன...இவற்றில் எதாவது, எப்போதாவது அல்லது
எப்போதும் எழுகிறதா என ஆராய்ந்து பாருங்கள் 
இருந்தால் தகர்த்தெரியுங்கள்.... ஆகாயம் தொடுங்கள்.. !!


#1 நீங்கள் மட்டுமே
பாதிக்கப்பட்டவர் என நினைப்பது


உங்களுடைய தோல்விக்கும் சூழலுக்கும் அடுத்தவரை சாடுவதை நிறுத்துங்கள்.
நீங்கள் அடைந்திருக்கும் இடம் உங்களுக்கு விருப்பமானதாக இல்லாத வேளையில் அதை
மாற்றும் முயற்சிகளை எடுங்கள். அதை விடுத்து இந்த விருப்பமற்ற இடத்திற்க்கு
வழிநடத்தியவர்கள் இவர்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதை
நிறுத்துங்கள்.  உங்கள் வாழ்விற்க்கு
உங்கள் பயணத்திற்க்கு நீங்கள், நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை மனமார நம்புங்கள்


#2 பிறரிடம் இருந்து
அதிகம் எதிர்பார்ப்பது


என்னதான் உங்கள் எதிர்பார்ப்பது அதீத நியாயமானதாக இருந்தாலும்.
"இவரால் இது நிகழ்ந்தால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்" என்ற எண்ணத்தை
மட்டும் மனதில் விதைத்தால். பெரும்பாலும் அது ஏமாற்றத்தில் முடியும் வாய்ப்புகளே
அதிகம். உங்கள் எதிர்பார்ப்புகள் பிறருக்கு முக்கியமானவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை
என்பதை உணருங்கள்


#3 பிறரின் துணையோடே
நம் வாழ்வு முழுமையடைகிறது என எண்ணுவது.


நம்மை தவிர வேறு எவராலும் நம்மை முழுமைப்படுத்த இயலாது. நண்பர்கள், குறிப்பிட்ட சில
உறவுகள், என யாரோவொருவரால்
நம் வாழ்வை முழுமை அடைய வேண்டும் என்று காத்திருக்காதீர்கள். நம்மளவில் ஆனந்தமாக
இருக்க கற்றுகொள்ளுங்கள் முடியாத வேளையில் அதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்


#4 பணமும் இன்பமும்
ஒன்றென நினைப்பது.


பணம் என்பது ஒருபோதும் வெற்றியின் அளவுகோல் ஆகாது. ஒரு சராசரி பணியாளர்
அடையும் இன்பமும், ஆனந்தமும் பெரும்
தொழில் முனைவோரிடம் இல்லாமல் போகலாம். நிச்சயம் பணம் பல பிரச்சனைகளை தீர்க்க
வல்லது ஆனால் அது இன்பம் என்றாகிவிடாது. எனவே பணத்தை மகிழ்ச்சிக்கும்
உற்சாகத்திற்க்குமான சமமான இணை என நினைப்பதை தவிருங்கள்


#5 வருங்காலத்தை
நிர்மாணிப்பது கடந்த காலம் என எண்ணுவது.


உதாரணமாக ஓர் ஏழ்மை குடும்பத்தை பின்னனியாக கொண்டதனாலேயே ஏழ்மையாகவே
வாழ்க்கை முடியும் என நம்புவது. சில சின்ன சறுக்கல்களை சந்தித்ததாலேயே எந்த
துணிவான முடிவுகளையும் எடுக்காமல் தயங்குவது என வருங்காலத்தை கடந்த காலத்தின்
நிகழ்வுகளாலேயே வடிவமைக்காதீர்கள். கடந்த காலத்தை எதனாலும் மாற்ற முடியாது. ஆனால்
வருங்காலத்தை நிச்சயம் நாம் விரும்பும் மாற்றத்துடன் கட்டமைக்க முடியும். இந்த
வித்தியாசத்தை உணர்ந்தாலே வருங்காலம் வசந்தம் தான்.


Similar News