Article 370 ரத்து செல்லும்.. வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம்..

Update: 2023-12-13 01:58 GMT

அரசியல் சட்டப்பிரிவு 370 மற்றும் 35(A) ரத்து செய்யப்பட்டது குறித்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் டிசம்பர் 11 வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு இந்தியராலும் போற்றப்படும் இந்தியாவில் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நீதிமன்றம் நிலைநாட்டியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். 2019 ஆகஸ்ட் 5 அன்று மேற்கொள்ளப்பட்ட முடிவு அரசியல் சட்டப்படியான ஒருமைப்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதே அல்லாமல், ஒருமைப்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெளிவாகவே கூறியுள்ளது. 370-வது பிரிவு, நிரந்தர தன்மை கொண்டதல்ல என்ற உண்மையையும் நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.


இது பற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பகிர்ந்து கொள்ளும் போது, "ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக்கின் பரந்த நிலப்பரப்பும், அமைதியான பள்ளத்தாக்குகளும், கம்பீரமான மலைகளும், கவிஞர்கள், கலைஞர்கள், சாகச வீரர்கள் ஆகியோரின் இதயங்களில் பல தலைமுறைகளாக இடம்பெற்றுள்ளன. இந்த பூமி அசாதாரணமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இங்குள்ள இமயமலை வானத்தைத் தொட்டு நிற்கிறது. இங்குள்ள ஏரிகள் மற்றும் நதிகளின் நீர்ப்பரப்பு சொர்க்கத்தைப் பிரதிபலிக்கின்றன. ஆனால், கடந்த 70 ஆண்டுகளாக இந்த இடங்கள், சிறப்புமிக்க மக்களுக்கு சற்றும் பொருத்தமில்லாத மோசமான வன்முறை மற்றும் நிலையற்ற தன்மையைக் கொண்டிருந்தன.


எனது வாழ்க்கையின் தொடக்கக் காலத்தில் இருந்து ஜம்மு, காஷ்மீர் மக்கள் இயக்கத்துடன் தொடர்புகொள்ளும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். ஜம்மு, காஷ்மீர் கட்டமைப்பு குறித்து நான் சார்ந்திருக்கும் சித்தாந்தம் என்பது வெறுமனே ஓர் அரசியல் விஷயம் அல்ல. சில ஆண்டுகளுக்குப் பின், ஸ்ரீநகரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், சக்திமிக்க முழக்கத்தை முன்வைத்தார். ‘மனிதநேயம்,’ ‘ஜனநாயகம்’, ‘காஷ்மீரியம்,’ என்ற அந்த முழக்கம் மகத்தான ஊக்கசக்தியாக இருந்தது. இன்று உச்சநீதிமன்றத்தின் டிசம்பர் 11-ந் தேதி தீர்ப்பு ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வை வலுப்படுத்தியுள்ளது. ஒற்றுமையின் பிணைப்புகள், நல்லாட்சிக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை இது வரையறுத்துள்ளது.

இப்போது ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஓவியம் தீட்டுவதற்கான தூய்மையான சித்திர துணியைப் போல பிறக்கின்றன. அப்படிப் பிறக்கும் ஆண் அல்லது பெண் குழந்தைகள் தான் தங்களின் துடிப்பான எதிர்கால விருப்பங்களை அதில் வண்ண ஓவியங்களாக தீட்ட இயலும். இப்போது மக்களின் கனவுகள் கடந்த காலத்தின் சிறைகளாக இல்லாமல் எதிர்காலத்தின் சாத்தியங்களாக இருக்கின்றன.

Input & Image courtesy: News

Tags:    

Similar News