பா.ஜ.கவை விமர்சித்த தி.மு.க கவுன்சிலர் - அருப்புக்கோட்டை நகர்மன்ற கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு!

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பா.ஜ.கவை ஒருமையில் விமர்சித்த தி.மு.க கவுன்சிலரால் பரபரப்பு.

Update: 2022-09-24 02:35 GMT

அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் நகராட்சியின் எதிர்கால பணிகள், நிலுவையில் உள்ள பணிகளின் விவரம் மற்றும் டெண்டர் விஷயங்கள் முறைப்படி பேசப்பட்டன. அதில் கூட்டத்தில் பேசிய ஆறாவது வார்டு தி.மு.க கவுன்சிலர் மணி முருகன் என்பவர் பா.ஜ.கவை வேண்டும் என்ற ஒருமையில் விமர்சத்து இருக்கிறார்.


தற்போது நடைபெறுவது நம்முடைய ஆட்சிதான். நம் தலைவர் தான் முதல்வராக இருக்கிறார். நம் தொகுதி உறுப்பினர்கள் தான் மந்திரியாக இருக்கிறார்கள். தி.மு.க உறுப்பினர்கள் பலரும் நகர மன்ற தலைவர்களாக இருக்கிறார்கள். பெரும்பாலும் நாம் கவுன்சிலராக இருக்கிறோம் அனைத்து பணிகளும் நன்றாக நடக்கும் பொழுது அருப்புக்கோட்டை நகராட்சியை விமர்சித்து தினசரி செய்தி நாளிதழில் செய்தி வெளிவந்து வண்ணம் உள்ளது. இந்த நகராட்சி மன்றம் கண்டிக்க வேண்டும். நகராட்சி விமர்சித்து செய்தி வெளியிட நாளிதழுக்கு இனி நகராட்சி எந்த விளம்பரமும் கொடுக்கக் கூடாது என்று கூறியிருந்தார். பின்னர் அவர் ஓப்பனாக ஒருமையில் பா.ஜ.கவை விமர்சனம் செய்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


பின்னர் கூட்டல் முடிவில் பத்திரிகையாளர்களை பா.ஜ.கவினர் சந்தித்து கவுன்சிலர் மணி முருகன் ஒருமையில் பேசியது குறித்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவரிடம் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். கூட்டத்திற்கு பத்திரிக்கையாளர்களை அழைக்க வேண்டும் என்று எந்த அவசியமில்லை கிடையாது. அவர்களை யார் கூட்டத்திற்கு அழைத்தது என்று பதிலளித்த பாரை கடந்து சென்றார். இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் மண்டல பா.ஜ.க தலைவர் பாண்டுரங்கன் தி.மு.க கவுன்சிலர் மணி முருகன் செயலுக்காக கண்டனம் தெரிவித்த அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News