தப்பிச்செல்லும்போது கார், ஹெலிகாப்டரில் பணத்தை அள்ளிச்சென்ற ஆப்கான் அதிபர்!
இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோட்டம் பிடித்தார். அவர் அருகே உள்ள தஜிகிஸ்தானில் அடைகலம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் முழுமையாக கைப்பற்றிவிட்டனர். அதே போன்று நேற்று முன்தினம் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிய போது, அதிபர் மாளிகையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டனர்.
இதனையடுத்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோட்டம் பிடித்தார். அவர் அருகே உள்ள தஜிகிஸ்தானில் அடைகலம் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச்செல்லும்போது மூட்டை, மூட்டையாக பணத்தை 4 கார்களில் கொண்டுசென்று, ஹெலிகாப்டரில் நிரப்பி கொண்டு சென்றுள்ளார். மீதம் இருந்த பணத்தை ஓடுதளத்திலேயே போட்டுவிட்டு சென்றுள்ளார். இத்தகவலை ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
Source: Maalaimalar
Image Courtesy: Malaimalar
https://www.maalaimalar.com/news/topnews/2021/08/17074740/2931248/tamil-news-Ashraf-Ghani-leaves-country-with-bundles.vpf