அத்திவரதர் வைபவத்தில் முறைகேடு: அதிரவைக்கும் RTI ஆவணங்கள்!

அத்திவரதர் வைபவம் விழாவில் முறைகேடு நடந்ததாக எழும் குற்றச்சாட்டுகள், இதற்கு பதிலளிக்கும் RTI தகவல்கள்.

Update: 2022-04-14 01:44 GMT

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும்தான் பக்தர்கள் தரிசனம் செய்யும் அத்திவரதர் வைபவத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இங்கு பிரசித்திபெற்ற அத்தி வரதர் கோவில், காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், அனந்த புஸ்கரணியில் வைக்கப்பட்டிருந்த அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்தி வரதர் பெருமாள் வெளியே எடுக்கப்பட்டு, 2019 ஜூலை 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி தர தொடங்கினார். ஜூலை 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி தந்த நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.


முதலில் 24 நாட்கள் சயண கோலம், 24 நாட்கள் நின்ற கோலத்தில் அருளுவார் என கூறப்பட்டது. மேலும் இந்த வைபவத்தை காண்பதற்காக பக்தர்கள் வெளியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தருவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது நியூஸ்18 செய்தி நிறுவனம் நடத்திய அம்பலப்படுத்தும் விசாரணை அறிக்கை பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கோவில் நிர்வாகம் தரும் தகவல்கள், தகவல் உரிமை அறியும் ஆணையம் தரும் தகவல்களில் முரண்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. 


இதில் முதலாவது குற்றச்சாட்டாக முன்வைப்பது VVIPகள் மற்றும் VIPகள் வருகைகள் சரியாக இல்லாமல் இருப்பது. மேலும் அவர்கள் கோவிலுக்கு கொடுத்த பொருட்களின் விபரமும் சரி வராமல் இருந்ததாக முதலாவது குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது. மேலும் இரண்டாவது குற்றச்சாட்டாகும் மொத்தம் எத்தனை பக்தர்கள் வருகை தந்தார்கள்? என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டாக இருக்கிறது. நிர்வாகம் தரக்கூடிய தரப்பில் முதலில் ஒரு லட்சம் பக்தர்கள் வருகை தந்ததாக கூறப்படுகிறது. ஆனால் RTI தரும் தகவல் வெறும் 80 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்தார்கள் என்றும் கூறப்படுகிறது. அடுத்ததாக பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணம் 50 ரூபாய் கட்டண வரிசையில் எவ்வளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள் என்பதிலும் குளறுபடிகள் உள்ளன. 

Input & Image courtesy:News 18

Tags:    

Similar News