டெல்லியில் கனரக வணிக வாகனங்களுக்கு தடை - காற்று மாசுபாடு அதிகரிப்பின் எதிரொலி!

டெல்லியில் காற்று மாசுபாடு மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால் லாரி மற்றும் வணிக கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-06 07:30 GMT

டெல்லியில் காற்று மாசு புது உச்சத்தை எட்டியுள்ளது. மிக மோசம் என்று சொல்லக்கூடிய நிலை-4 என்ற அளவை எட்டியிருப்பதால் மின்சாரம் மற்றும் மாசு குறைந்த பிஎஸ் 6 வகை வாகனங்கள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன. காற்று மாசால் சாலைகள் எல்லாம் புகை மண்டலம் போல காட்சி தருகிறது. இதனால் வாகன போக்குவரத்து சிரமத்துக்குரியதாக மாறி உள்ளது. இந்த நிலையில் மாசு ஏற்படுத்தும் கனரக லாரிகள் வணிக வாகனங்களுக்கு நகர்புறத்துக்குள் தடை விதித்து நேற்று புது உத்தரவு வெளியாகி உள்ளது.

இந்த உத்தரவு டெல்லியில் மட்டுமல்ல அதன் தலைநகர் வட்டார மண்டல பகுதிகளான சில அண்டை மாநில நகரங்களுக்கும் பொருந்தும். அந்த பகுதிகளில் நடைபெறும் பொதுப்பணி திட்டங்களை செயல்படுத்தும் போது இந்த நடைமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட உள்ளது. அத்யாவசிய பணிகள் அல்லாத கட்டுமானங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள அரியானா , ராஜஸ்தான் உத்திர பிரதேச நகரங்களிலும் காற்று மாசு கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SOURCE :DAILY THANTHI

Similar News