வேதாரண்யம்: நைவேத்தியமாக பக்தர்கள் மீது வீசப்படும் பழம் வினோத விழா!

கோவிலில் பக்தர்கள் மீது வீசப்பட்ட வாழைப்பழத்தை வீசும் வினோத திருவிழா.

Update: 2022-04-07 00:30 GMT

நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் கிராமம் என்ற கிராமத்தில் திருமேனி அம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாத திருவிழாக்கள் கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வாழைப்பழத்தையும் திருவிழாவும் நடைபெற்றது. ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்த பண்டிகைகள் நடைபெறும். அந்த வகையில் இந்த பண்டிகை இந்த கோவிலில் விசேஷமாம். 


பொதுவாக கோவில்களில் நடைபெறும் விழாக்களில் மாவிளக்கு போடுதல், காவடி எடுத்தல்,நேர்த்திக் கடனுக்காக மனித உடலின் பாகங்களை மண் பொம்மைகளாக வாங்கிக் கோயிலில் காணிக்கையாக செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அதன்பின் தகட்டூர் பைரவநாத சுவாமி ஆலயத்திலிருந்து அக்னிக் குண்டமான கப்பரையை, பக்தர்கள் மேள தாளங்கள் மற்றும் வானவெடிகள் முழங்க ஊர்வலமாக சுமார் 5 கி.மீ. தூரம் எடுத்து வந்து மாப்பிள்ளை வீரன்கோயிலை அடைந்தனர்.


சுவாமிக்கு சிறப்பு ஆராதனைக்குப்பின் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள்மீது வீசப்பட்ட வாழைப்பழத்தைப் பிடித்து உண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதும், தீராத நோய்கள் யாவும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே குழந்தைப்பேறு வேண்டி நிறைய தம்பதிகள் வழிபட்டு வீசப்படும் வாழைப்பழத்தை பிடித்து உண்டனர். எனவே குழந்தை பாக்கியம் வேண்டியவர்கள் மற்றும் தீராத நோய் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடுவதால் அவர்கள் நோய் நீங்கும், குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம். 

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News