துர்கா பூஜை தாக்குதல்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டவை - வெளியாகும் உள்துறையின் பகீர் அறிக்கை !
இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மத நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை என்று வங்கதேச உள்துறை அமைச்சர் கூறினார்.
வங்கதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை துர்கா பூஜையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் 'முன் கூட்டியே திட்டமிடப்பட்டவை' என்றும், இந்த தாக்குதல்கள் வங்கதேசத்தின் மத நல்லிணக்கத்தை அழிப்பதை நோக்கமாகக் கொண்டவை என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் கூறினார்.
கொமிலாவில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாக நூற்றுக்கணக்கான பெயரிடப்பட்ட மற்றும் பெயரிடப்படாத நபர்கள் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புனித குர்ஆனை அவதூறு செய்ததாக கூறப்படுவது மற்றும் கொமில்லாவில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வங்க தேசத்தில் மத நல்லிணக்கத்தை அழிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்டவை என்று உள்துறை அமைச்சர் கூறினார். இது ஒரு குறிப்பிட்ட குழுவால் தூண்டப்பட்ட செயல் என்று எங்களுக்குத் தோன்றுகிறது என அவர் கூறினார்.
கொமிலா சம்பவத்திற்கான காரணத்தை அவரிடம் கேட்டபோது, அனைத்து ஆதாரங்களும் கிடைத்தவுடன் அதை பகிரங்கப்படுத்துவோம், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இது வரை இல்லாத அளவு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று அமைச்சர் அசாதுசமான் கான் கூறினார்.
கொமில்லா, ராமு மற்றும் நசீர்நகரில் நடந்த வகுப்புவாத வன்முறை செயல்களும் நாட்டை சீர்குலைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்று கான் கூறியதாக டாக்கா ட்ரிபியூன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது
சனிக்கிழமை இரவுக்கு பிறகு எந்த வன்முறை சம்பவமும் பதிவாகவில்லை. உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. வகுப்புவாதத்தை தூண்டி, அமைதியை குலைக்கு முயற்சிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்" என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.