வங்கிகளின் வாராகடன் குறைந்து லாபம் அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் தகவல்!

வங்கிகளின் வாராக்கடன் குறைந்து வருகிறது. லாபம் அதிகரித்துள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2023-12-06 05:45 GMT

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அவர் கூறியதாவது :-


அமெரிக்கா , ஜெர்மனி , சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கூட வங்கிகள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகள் திறம்பட செயல்பட்டு வருகின்றன. அவற்றின் நிலைமை ஆரோக்கியமாக இருக்கிறது. இந்திய வங்கிகளின் வாரா கடன் குறைந்து வருவது மட்டுமின்றி லாப விகிதம் அதிகரித்து வருகிறது.


கடந்த 2022 - 2023 நிதி ஆண்டில் பட்டியலிடப்பட்ட வர்த்தக வங்கிகளின் நிகர வாரா கடன் சதவீதம்  0.95 சதவீதமாகவும் பொதுத்துறை வங்கிகளின் வாரா கடன் 1.24 சதவீதமாகவும் குறைந்தது. வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களிடம் இருந்து பணத்தை மீட்க சி.பி.ஐ அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி 13 ஆயிரத்து 978 வாடிக்கையாளர்களிடமிருந்து படத்தை பணத்தை மீட்க வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


5674 வாடிக்கையாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை மொத்தம் ரூபாய் 33,801 கோடி மீட்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடன் பெற தகுதியற்றவர்களுக்கு தொலைபேசி உத்தரவின் பேரில் கடன் வழங்கப்பட்டது. அதன் பலனாக வங்கிகள் நஷ்டத்தை சந்தித்தன. ஒரு காலத்தில் ஐந்து பலவீனமான நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியா பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் உலகிலேயே வேகமான பொருளாதார வளர்ச்சி கண்ட நாடாக உயர்ந்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Similar News