ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்படாது: கோரிக்கைகளை நிறைவேற்ற ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வங்கி ஊழியர்கள் ஐந்து நாட்கள் வேலை நிறுத்தம்.

Update: 2023-01-27 00:57 GMT

வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வதில்லை திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கூறுவது, காலி பணியிடங்களின் நிரப்புவது போன்ற பல்வேறு கோரிக்கைகள் தற்போது வரை வங்கிகளில் தீர்க்கப்படாமல் இருக்கிறது. குறிப்பாக நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது, ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை நேரடியாக தொடங்குவதும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கம் மும்பை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது.


இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் வருகின்ற 30ஆம் தேதி மற்றும் 31ஆம் தேதிகளில் வெளிநிறுத்ததில் ஈடுபட போகுவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்து இருந்தது. அதன்படி வருகின்ற 30, 31 ஆம் தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. நிலையில் அதற்கு முந்திய நாளான இன்று குடியரசு தினம் மற்றும் நான்காவது நாள் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில் விடுமுறை வருவதாக இந்த வாரத்தில் மொத்தம் ஐந்து நாட்களில் வங்கிகள் இயங்காத ஒரு சூழ்நிலை இருக்கிறது.


இடைப்பட்ட நாளான வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிகள் செயல்படும். வேலை நிறுத்தம், விடுமுறை நாட்கள் என மொத்தம் ஐந்து நாட்கள் வங்கிகள் செயல்படாது. வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை இல்லாமல் இருப்பதால் வங்கி சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News