2 வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி.. உலகிலேயே முதல் நாடாக இணைந்தது இதுதான்!

கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சிக்கி அவதியுற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக உலகில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை கண்டுப்பிடித்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

Update: 2021-09-17 13:07 GMT

2 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி அனைத்து நாடுகளுக்கும் முன்னுதாரணமாக கியூபா திகழ்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் சிக்கி அவதியுற்று வருகிறது. இதனை தடுக்கும் விதமாக உலகில் இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தடுப்பூசியை கண்டுப்பிடித்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இதனிடையே குழந்தைகளும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பெரியவர்களே இந்த நோயால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளும் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தடுப்பூசி தயாரிக்கும் பணியில் உலக சுகாதார அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், கியூபாவில் 2 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. கியூபா தலைநகர் ஹவானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 வயது முதல் 10 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனிடையே உலகிலேயே கியூபா தான் முதன்முறையாக இவ்வளவு காலத்திலேயே சிறிய வயதிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Hindu Tamil

https://www.hindutamil.in/news/world/716770-cuba-begins-vaccinating-children-as-young-as-two-against-covid-19.html

Tags:    

Similar News