புற்றுநோயை தடுக்க பாதுகாப்பு அரணாக விளங்கும் இவற்றின் நன்மைகள் !

Benefits of eating broccoli.

Update: 2021-09-10 01:23 GMT

ப்ரோக்கோலி இந்தியாவில் பொதுவாக பச்சை காலிஃபிளவர் என்று அழைக்கப்படுகிறது. ப்ரோக்கோலியில் வைட்டமின் A, C, ஃபைபர், கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை உடலை வலிமையாக மாற்றுகின்றன மற்றும் நோய்களைத் தடுக்கின்றன. ப்ரோக்கோலியில் புற்றுநோயைத் தடுக்கும் சல்போராபேன் உள்ளது. புற்றுநோய் நோயாளிகள் ப்ரோக்கோலியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் நிறைந்த, ப்ரோக்கோலி உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. 


இதய நோயாளிகள் ப்ரோக்கோலியை கட்டாயமாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில், ப்ரோக்கோலியில் போதுமான அளவில் வைட்டமின் C உள்ளது. இது இதயத்திற்கு நன்மை பயக்கிறது. பிற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது ப்ரோக்கோலி மிகவும் ஆரோக்கியமானதாகும். ப்ரோக்கோலியை சாப்பிடுவதன் மூலம், உடலில் சேரும் கெட்டக் கொழுப்பைக் குறைத்து உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது. ப்ரோக்கோலியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் E காம்ப்ளக்ஸ் போன்ற ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. அவை சருமத்திற்கு நன்மை பயக்கிறது. அவை தோல் வியாதிகளைத் தடுக்கின்றன. 


ப்ரோக்கோலியை சாப்பிடுவதன் மூலம் கண் தொடர்பான பல பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. ப்ரோக்கோலியில் கண்களுக்கு நன்மை பயக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ப்ரோக்கோலியில் எண்ணற்ற வைட்டமின்கள் உள்ளன. இவை எலும்புகளை வலுப்படுத்துகின்றன மற்றும் எலும்பு தொடர்பான நோய்களைத் தடுக்கின்றன. பெண்கள் தங்களின் தலைமுடி தடிமனாகவும் வலுவாகவும் இருக்க ப்ரோக்கோலியை உட்கொள்ள வேண்டும். ப்ரோக்கோலி முடி வேர்களை வலுப்படுத்தி முடி உதிர்தலைக் குறைக்கிறது.  

Input & image courtesy:Logintohealth



Tags:    

Similar News