நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கும் தென்னிந்திய உணவு!
Benefits of sambar
நம்முடைய இந்திய உணவுகள் சுவைக்கானவை மட்டுமல்ல சுகாதாரமானவையும் கூட தான். நம் நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு தனித்துவமான உணவு வகைகள் உண்டு. தென்னிந்தியாவில் இட்லி, தோசை, ஊத்தப்பம், வடை, சாம்பார், சட்னி போன்ற அரிசி மற்றும் பருப்பு வகை உணவுகள் மிகவும் பிரபலம். இருப்பினும் இவற்றுள் சாம்பார் எனும் உணவு வகையின் அற்புதமான நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த சாம்பார் மிகவும் சத்தான மற்றும் பல்வேறு காய்கறிகளுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த சாம்பார் சீரான, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியையும் அடைய உதவும் ஒரு மாமருந்து. இந்த சாம்பார் துவரம் பருப்பு கொண்டு சமைக்கப்படும் ஒரு உணவு ஆகும். இந்த சாம்பாரில் பருப்பு மற்றும் பல்வேறு காய்கறிகளால் சேர்க்கப்படுவதால் இதில் நிறைய நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் எடை குறைக்க விரும்புபவர்கள் இந்த நார்ச்சத்துள்ள உணவை எடுத்துக்கொண்டால், நீண்ட நேரம் பசியில்லா உணர்வு இருக்கும். ஒரு திருப்தி உணர்வு கிடைக்கும்.
இதன் மூலம் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க முடியும்.உடலில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக்கூடிய வைட்டமின்கள், தாதுக்களான இரும்பு, துத்தநாகம், ஃபோலேட், மெக்னீசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஆகியவற்றில் சாம்பாரில் அதிகம் உள்ளது. சாம்பாரில் மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மிளகு மற்றும் கடுகு ஆகியவை சேர்க்கபடுவதால் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்க உதவியாக இருக்கும்.
Image courtesy: wikipedia