தமிழகத்தில் வங்காளதேசத்தினர் அதிகமாக இருக்கிறார்கள் - தமிழக அரசின் அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழகத்தில் வங்காளதேசத்தினர் அதிகமாக இருக்கிறார்கள் என்று தமிழக அரசு அறிக்கை அளித்துள்ளது.
உள்துறை அமைச்சர்கள் மாநாடு:
தமிழகத்தில் வங்காளிகள் என்ற போர்வையின் கீழ் வங்காளதேசத்தை சேர்ந்த நபர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். குறிப்பாக திருப்பூரில் இவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் சட்ட அமைச்சர் தெரிவித்து இருக்கிறார். ஹரியானா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழகம் சார்பில் சட்ட அமைச்சர் ரகுபதி அவரும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த மாநாட்டின் போது தமிழக அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிப்போர்ட்டில் தான் திருப்பூரில் அதிகமாக வங்காள தேசத்தினர் வசிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இலங்கையில் இருந்த அகதிகளாக தமிழ்நாட்டில் 176 பேர் வருகை தந்த இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
வங்காளதேசத்தினர் திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக வசிக்கும் நிலை:
தமிழக முழுவதும் இலங்கை அகதிகளாக சுமார் 91 ஆயிரத்து 761 பெயர் தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்க வைக்க பட்ட இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். திருச்சியில் உள்ள முகாம்களில் ஈரான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த அகதிகள் 136 பெயர் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் வங்காளிகள் என்ற பெயரில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அதிகமாக வசித்து வருவதாகவும் சட்ட அமைச்சர் தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Polimer News