'பாரத் நெட்திட்டம்' - கிராமங்களின் முன்னேற்றம் வேலைவாய்ப்பில் அசத்தி வரும் மத்திய அரசு

நாட்டில் 6.40 லட்சம் கிராமங்களுக்கு 1.39 லட்சம் கோடியில் பிராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்கும் பாரத் திட்டத்திற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2023-08-07 15:45 GMT

கிராமப்புற பகுதிகளுக்கு தொலைத்தொடர்பு வசதி வழங்கும் உலகின் மிகப்பெரிய திட்டங்களில் ஒன்றாக 'பாரத் நெட்' திட்டம் உள்ளது. கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் நாட்டின் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதி வழங்கப்படும். தற்போது வரை சுமார் ஒரு லட்சத்து 94 ஆயிரம் கிராமங்கள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன.


மீதமுள்ள கிராமங்களையும் இரண்டரை ஆண்டுகளில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ரூபாய் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 579 கோடியில் 6 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஏறக்குறைய அனைத்து கிராம வீடுகளுக்கும் கடைசி மைல் கண்ணாடி இழை கேபிள் இணைப்பு வழங்கப்படும்.


மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ் என்.எல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பாரத் பிராட் பேண்ட் நெட்வொர்க் நிறுவனம் கிராமப்புற அளவிலான தொழில் முனைவோருடன் இணைந்து இந்த வசதியை வழங்கும். இதன் முன்னாடி திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில் தற்போதைய திட்டம் இறுதி செய்யப்பட்டது. தொடக்கமாக நாட்டில் நான்கு மாவட்டங்களில் நிறைவேற்றப்பட்ட முன்னோடி திட்டம் பின்னர் பல்வேறு மாநிலங்களில் 60000 கிராமங்களுக்கு விரிவு படுத்தப்பட்டது.


கிராமப்புற பகுதிகளுக்கு பிராட்பேண்ட் இணைய இணைப்பு வழங்கும் திட்டத்தால் பகுதி மக்களின் வாழ்க்கை மேம்பாடு அடைந்தது வருகிறது. 6 லட்சத்து 40 ஆயிரம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு திட்டத்தால் 2.4 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


SOURCE :DAILY THANTHI

Similar News