பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் !

அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.;

facebooktwitter-grey
Update: 2021-08-18 07:02 GMT
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம் !

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி  பாரதி பாஸ்கர்  அவர்களுக்கு கடந்த வாரம் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது.

அவருக்கு டாக்டர்கள் பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டனர். மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த மருத்துவ முயற்சி வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிகிறது. பாரதி பாஸ்கர் உடல்நிலையை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.



இந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இன்னும் ஒரு வாரம் வரை அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் எனவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தி  தமிழக மக்களிடம்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image : ArealNews.

Maalaimalar

Tags:    

Similar News