ஸ்ரீரங்கம் கோவில்: ₹1.80 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு!
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலம் மீட்க பட்டுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயிலின் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை (HR&CE) அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திருவானைக்கோவில் மெட்ராஸ் டிரங்க் சாலையில் உள்ள பிரதான நிலத்தை ஆக்கிரமிக்க இருவர் மேற்கொண்ட முயற்சியை முறியடித்தனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த எஸ்.கிரி மற்றும் டி.ஆனந்த் ஆகியோர் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் வேலி அமைத்ததாக கிடைத்த தகவலின் பேரில், இணை கமிஷனர் எஸ்.மாரிமுத்து தலைமையிலான அதிகாரிகள் குழுவினர், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
வேலியை அகற்ற மண் அள்ளும் கருவியும் இயக்கப்பட்டது. செயல்பட்ட ஒரு மணி நேரத்தில் ஆறு சென்ட் அளவுள்ள இடம் மீட்கப்பட்டது. அந்த இடத்தின் மதிப்பு ₹1.80 கோடி என்று திரு.மாரிமுத்து கூறினார். கோயிலுக்குச் சொந்தமான காணிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கோவில் நிலங்களை தற்பொழுது ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தி வருகிறது.
ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலான காலி இடங்கள் கான்கிரீட் வேலிகளால் பாதுகாக்கப்பட்டுள்ளன. நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அந்த இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய மர்ம நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். கோயில் இடங்கள் மற்றும் நிலங்களைப் பாதுகாக்க கண்காணிப்பு முடுக்கிவிடப்படும் என்று கூறிய மூத்த அதிகாரி, ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
Input & Image courtesy: The Hindu