மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான்.. எலான் மஸ்க் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யத் தகவல்..
அமெரிக்காவிற்கு தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க இருக்கிறார். அமெரிக்காவிற்கு 3 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடியை அவர்களை ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் சந்தித்தார்.
அப்போது மோடியின் ரசிகன் நான் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியும் மற்றும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க் இருவரும் பேச்சு வார்த்தையின் போது சந்தித்தார்கள். சந்திப்புக்கு பிறகு எலான் மஸ்க் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் இது பற்றி அவர் கூறும் பொழுது, பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது ரசிகன் நான். இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
நான் அதனை ஏற்றுக்கொண்டேன். அடுத்தாண்டு இந்தியா செல்ல திட்டமிட்டு உள்ளேன். டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் நிறுவப்படும் என்று நான் நம்புகிறேன். இதற்காக அதர்வை தெரிவித்த பிரதமரும் நரேந்திர மோடி அவர்களுக்கும் எதிர்காலத்தில் எங்களால் ஏதாவது ஒன்றை அறிவிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்று பதிவிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: News