இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தை வானுயர புகழ்ந்த பில்கேட்ஸ் - என்ன கூறினார் தெரியுமா?

Update: 2022-05-29 13:42 GMT

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி போடுகின்ற பணி கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கியது. இதுவரையிலும் சுமார் 193 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி தகுதி வாய்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதில் தடுப்பூசியின் பங்கு மிகப்பெரியது. இதன் வெற்றிக்கு அமெரிக்க தொழில் அதிபரும், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுடன் சந்திப்பின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி இயக்கத்தை பில்கேட்ஸ் மிகவும் பாராட்டியுள்ளார். இந்தியாவின் தடுப்பூசி வெற்றியானது உலகத்திற்கு ஒரு படிப்பினை வழங்கியுள்ளது. இவ்வாறு பில்கேட்ஸ் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Maalaimalar

Tags:    

Similar News