நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்களை நீக்கும் மசோதா நிறைவேற்றம்!
நாடாளுமன்றத்தில் 76 பழைய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
நடைமுறையில் இல்லாத 76 பழைய சட்டங்களை ரத்து செய்ய கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரத்து செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கடந்த ஜூலை 27ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இரண்டு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய மத்திய சட்டமந்திரி அர்ஜுன் ராம் கூறியதாவது:-
மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு வாழ்க்கை எளிதாகும் வகையில் 1486 பழைய சட்டங்களை ரத்து செய்தது. தற்போது நீக்கப்படும் 76 பழைய சட்டங்களையும் சேர்த்து மொத்தம் 1562 சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று கூறினார். மதிய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்காலிக வரி வசூல் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்ர பட்ஜெட்டில் சுங்கவரி மற்றும் கலால் வரிகளில் செய்யப்பட்ட மாற்றங்களுக்கு உடனடி ஒப்புதல் அளிக்க மசோதா வகை செய்கிறது. நிதி மசோதா நிறைவேற்றப்படும் வரை செயல்பாடுகள் நடப்பதை மசோதா தடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தில் சம்மக்கா சாரக்கா மத்திய பழங்குடியின பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலை எதிர்த்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில் இது நிறைவேறியது. இதனால் இரு அவைகளின் ஒப்புதலையும் பெற்றுவிட்டது. நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் கூறியதாவது :-