முந்தைய அரசை விட 1.5 மடங்கு அதிக வேலைவாய்ப்பை அள்ளித் தந்த பா.ஜ.க - பிரதமர் மோடி!

முந்தைய அரசு பத்து ஆண்டுகளில் அளித்த வேலைவாய்ப்பை விட பா.ஜனதா அரசு ஒன்றரை மடங்கு அதிக வேலை வாய்ப்பு அளித்துள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2024-02-15 01:08 GMT

மத்திய அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன கடிதங்கள் அளிக்க 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழா நடத்தப்படுகிறது. பன்னிரண்டாம் தேதி இந்த வேலை வாய்ப்பு திருவிழா நடந்தது.பிரதமர் மோடி மத்திய அரசு பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொளி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்கினார் கட்சியில் அவர் பேசியதாவது:-


இந்திய அரசு தனது 10 ஆண்டுகால ஆட்சியில் அளித்த வேலைவாய்ப்புகளை விட பா.ஜ.க அரசு தனது பத்தாண்டு ஆட்சியில் அளித்த வேலை வாய்ப்புகள் ஒன்றரை மடங்கு அதிகம். ஆள் தேர்வு பணிகளை முடிக்க முந்தைய அரசு தேவையின்றி நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அது லஞ்சத்தை வளர்த்தது . ஆனால் எங்கள் அரசு வெளிப்படை தன்மையை கொண்டு வந்தது .குறிப்பிட்ட காலத்துக்குள் ஆள் தேர்வு நடப்பதை உறுதி செய்தது. இளைஞர்கள் தங்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதாக நம்புகிறார்கள்.


கடின உழைப்பும் திறமையும் இருந்தால் தங்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் என்று கருத்துகிறார்கள் . ஒரு கோடி வீடுகளில் சூரியசக்தி மின்சாரம் தயாரிப்பது, உள்கட்டமைப்பு திட்டங்களில் பெரும் முதலீடு செய்வது என எந்த திட்டமாக இருந்தாலும் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம் .ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுடன் உலகிலேயே மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. நகரங்களில் கூட இளைஞர்கள் புதிய நிறுவனங்களை உருவாக்குகிறார்கள்.


அதனால் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு தள்ளுபடி அளிக்கிறது. ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க பணிகளுக்கு ஒரு லட்சம் கோடி நிதி அறிவித்துள்ளது. முந்தைய அரசு ரயில்வே துறை மீது கவனம் செலுத்தவில்லை. சாமானியர்களின் எதிர்பார்ப்புகளை புறக்கணித்தது. இவ்வாறு அவர் பேசினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News