மகாராஷ்டிராவில் 32 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முடிவு!

மகாராஷ்டிராவில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 32 ல் களமிறங்க பா.ஜ.க முடிவு செய்துள்ளது.

Update: 2024-03-08 07:06 GMT

மகாராஷ்டிராவில் 32 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டணி கட்சித் தலைவர்களான ஷிண்டே ,அஜித் பவார் அதிர்ச்சி அடைந்திருப்பதால் அங்கு தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சி தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


இந்த தேர்தலில் போட்டியிட 195 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தற்போது 150 தொகுதிகளுக்கான இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் பணியில் பாஜக மேல் இடம் தீவிரமாக உள்ளது .இதற்காக கர்நாடகா, அரியானா ,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய பாஜக தீவிரம் காட்டிவருகிறது.


மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா ஷிண்டே பிரிவு தேசியவாத காங்கிரஸ் உள்ளன .இங்கு தொகுதிகளை பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது .இதனால் அமித்ஷா மும்பையில் முகாமிட்டு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது நேற்று இரவு வரை நீடித்தது. இருந்தபோதிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது .அங்கு மொத்தமுள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளில் 32-ல் களமிறங்க பாஜக உறுதியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


SOURCE :Dinakkural.

 


Similar News