பள்ளிகளில் கட்டாய மதமாற்றம், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விளைவுகளை சந்திக்க நேரிடும் - எச்சரிக்கும் அண்ணாமலை

அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் கட்டாய மத மாற்றத்திற்கு இறந்த சிறுமியின் பின்னணிக் காரணங்கள் என்ன? என்பதை கூறுகிறார்.

Update: 2022-04-22 14:58 GMT

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்த பள்ளியில் கட்டாய மத மதமாற்றத்தின் பெயரில் இறந்த சிறுமியின் வழக்கு தற்போது அனைத்து திசைகளிலும் மிகவும் பரவலாக பேசப்பட்டது. காரணம் இவ்வளவுக்கும் முக்கியமான பிரச்சினைகள் குறிப்பாக பள்ளிகளில் கல்வியை கற்பிப்பதற்கும் பதிலாக மதமாற்றத்தில் திணிப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள K. அண்ணாமலை அவர்கள், "TN பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் நிஜமாகி வருகிறது. தினமும் திறந்த மற்றும் தீவிரமடைந்து வருகிறது. இந்த மாதிரியான மதத் தாக்குதல்களை நாங்கள் எதிர்த்து வருகிறது.


தமிழக அரசு இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக செயல்படவில்லை இதுபற்றி நடவடிக்கை எடுக்கவில்லை. இனி பற்றி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் குறிப்பாக ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் நடத்தும் பள்ளிகளில் இதுபோன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றது கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் பல்வேறு பள்ளி குழந்தைகள் மூளை சலவை செய்யப் படுகிறார்கள். மேலும் அத்தகைய குழந்தைகள் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வருகிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.


மேலும் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல. ஓராயிரம் சம்பவங்கள் இதற்கு முன் அரங்கேறியுள்ளன. ஆனால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக் கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது. 

Input & Image courtesy:Twitter source

Tags:    

Similar News