சட்டியை பார்த்து அடுப்புக்கரி கேட்டுச்சாம்.. நீ கருப்பா இருக்கனு.. ஸ்டாலின் கதையும் அப்படிதான்.. அண்ணாமலை சரவெடி பேச்சு!

தமிழக பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என்று ஸ்டாலின் கருத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

Update: 2021-02-27 11:43 GMT

தமிழக பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என்று ஸ்டாலின் கருத்தை பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.



 


இன்று திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது: பாஜகவில் ரவுடிகள் இணைந்துள்ளனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்வது எப்படி இருக்கு தெரியுமா? சட்டியை பார்த்து அடுப்புக்கரி சொல்லுச்சாம்.. நீ கருப்பா இருக்க என்று. அதே போலத்தான் அராஜகமும் லஞ்சமும் எந்த ஆட்சியில் அதிகமாக இருந்தது என்பதை தமிழக மக்கள் நன்று தெரிந்து வைத்துள்ளனர். ஸ்டாலின் இப்படி பேசுவது ஏற்புடையது இல்லை.


மேலும், பெட்ரோல் விலை விரைவில் குறையும். மக்கள் சிறிது காலம் பொறுமை காக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Similar News