12 மொழிகளில் வெளியான பாஜகவின் புதிய தேர்தல் பாடல்!
பாஜகவின் புதிய தேர்தல் பாடல் 12 மொழிகளில் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கவிருக்கும் நேரத்தில் பாஜக தனது புதிய தேர்தல் பாடலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் அயோத்தி ராமர் கோவில் வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன .இந்தியாவை மோடியின் குடும்பம் என அழைக்கும் வகையில் அமைந்திருக்கும் பாஜகவின் தேர்தல் விளம்பர பாடலில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை கூறி இதனால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடியின் குடும்பம் என்று குறிப்பிடும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன .
அதில் மேலும் பாஜகவின் கொள்கைகளால் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடுவோர் நடுங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடல் சுமார் 12 இந்திய மொழிகளில் பாடப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி பாஜக ஒரு தேர்தல் பாடலை வெளியிட்டிருந்தது.
அதற்கு முன்பு டிசம்பர் மாதம் மோடி மீண்டும் வருவார் என்பது போன்ற ஒரு பாடலையும் வெளியிட்டு பெரும் விளம்பரத்தையும் செய்திருந்தது .அந்த பாடலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்வது, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிலைநாட்டுவது, அவர் பங்கேற்ற போது கூட்டங்களில் வீடியோக்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.
SOURCE :Dinaseithi