பாகிஸ்தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னாவின் சிலை தகர்ப்பு!
பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம், தென்மேற்கு கடலோரம் குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்தியாவாக இருந்தபோது பாகிஸ்தானாக பிரிந்து செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்தான் ஜின்னா. அவரது சிலையைதான் பலூச் விடுதலை முன்னணி என்ற அமைப்பு வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் சிலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பலூசிஸ்தான் தனியாக பிரிந்து செல்ல திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்த மக்கள் பாகிஸ்தானில் பல முறை போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பலூசிஸ்தான் மாகாணத்தில் சோதனை சாவடி ஒன்றில் நடைபெற்ற தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Daily Thanthi